தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்

Wait 5 sec.

தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்பவராக ஜோசியர்தான் இருப்பதாகவும், முதல்வர் விஜய்யை ஆட்டிப்படைத்துதான் ஆட்சி நடப்பதாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவை வ.உ.சி பூங்காவில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் நடந்துவரும் குற்றங்கள் குறித்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது:''தமிழகத்தில் அடுக்கடுக்காக பல்வேறு குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால், பரிகார பூஜை செய்துகொண்டு இருக்கிறார் முதல்வர் விஜய்.அழுத்த அழுத்தத்தான் திமுக மேலே எழுவோம். அதுதான் திமுகவின் டிஎன்ஏ. தவெக ஆட்சியின் அவலங்களை மறைக்க அடிக்கடி ரெய்டு நடத்தப்படுகிறது. திமுகவுக்கு பின்வாங்கிய வரலாறே இல்லை.லாக்கப் மரணங்கள் குறித்து வாய் திறந்தாரா? பத்திரிகையாளர்களைக் கண்டாலே வாய் திறக்க அஞ்சுகிறார். மக்களின் எந்தவொரு கேள்விக்கும் பதில் கூறாமல் இருக்க முடியாது. பதில் கூற வேண்டியது அவரின் கடமை. நன்றாக ரிஹர்சல் பார்த்துவிட்டு வேன் மீது ஏறி பேசிவிட்டு போனால் மட்டும் போதாது. அவர் வாயில் வரும் ஒரே வார்த்தை, திமுக... திமுக... திமுக... சினிமா நடிக்கும்போது, சிஎம் சார் ஒரு ஃபார்முலா வைத்திருந்தார். சக நடிகர்கள்மீது அவதூறு பேசி ஜெயித்துவிடுவார். அதே ஃபார்முலாவில் அரசியலிலும் ஜெயித்துவிட்டார். மின் கட்டண உயர்வால் நடுத்தர மக்கள் கூடுதலாக செலவு செய்யும் கஷ்டத்தில் இருக்கின்றனர். அரிசி, காய்கறி வாங்க மக்களால் முடியவில்லை. அவர்களின் கண்ணீர் இந்த ஆட்சியை முடித்துவைக்கும்.இயற்கை பேரிடர் வந்தால் மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுவார்கள். தவெக ஆட்சியில் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்தான். கொலையும் வன்முறையுமாக மாறியுள்ளது தமிழ்நாடு. இதுதான் தவெக ஆட்சி கொண்டுவந்த மாற்றமா?'' எனக் குறிப்பிட்டார். முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்In a TVK government, it is the astrologer who will decide everything M.K. Stalin