இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!

Wait 5 sec.

இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திரமாக செல்லலாம் என ஈரான் புதன்கிழமை (நவ. 4) அறிவித்துள்ளது.ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் விளைவாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன.இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகள் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.இந்த நிலையில், இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நான்கு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக பயணிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.மேலும், ஹோர்முஸ் வழியாக பயணிக்கும் இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.தேர்தல் முடிவுகள்! போருக்கு எதிரான அமெரிக்கர்களின் பிரதிபலிப்பு! - ஈரான் கருத்துIran announced on Wednesday (Nov. 4) that Indian ships may pass freely through the Strait of Hormuz.