ஜோா்டானில் இலங்கை தூதரகம் அருகே பாதுகாப்பு அதிகாரி குத்திக் கொலை

Wait 5 sec.

ஜோா்டான் தலைநகா் அம்மானில் இலங்கை தூதரகம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவா் கூா்மையான ஆயதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.கொல்லப்பட்ட அதிகாரியிடமிருந்து ஆயுதத்தைப் பறிக்க முயன்ற தாக்குதல் நடத்திய நபரை, மற்றொரு பாதுகாப்பு அதிகாரி துணிச்சலுடன் தடுத்து நிறுத்த முயன்றாா். அப்போது ஏற்பட்ட மோதலில் அந்த இரண்டாவது அதிகாரியும், தாக்குதல் நடத்திய நபரும் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய நபா் உடனடியாகக் கைது செய்யப்பட்டாா். இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் என்றும், பாதுகாப்புப் படை அதிகாரிகளை குறிவைத்து இச்சதி அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.