மீண்டும் தமிழ்த் திரைப்படத்தில் ஷேன் நிகம்!

Wait 5 sec.

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் புதிய தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கிறார். பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஷேன் நிகம் நாயகனாகவும் கவனம் பெற்று வருகிறார்.தமிழில் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து, வெளியான பல்டியும் சரியான வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில், ஷேன் நிகம் மீண்டும் நேரடித் தமிழ்ப் படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். ட்ரூ ஸ்டோரிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஷாம் சூர்யா இயக்குகிறார். நடிகர்கள் சத்யராஜ், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடிக்க படப்பிடிப்பு ஏற்காட்டில் தொடங்கியுள்ளது. ஆஷிக் அபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். நடிகர் சூர்யாவும் தீபாவளியும்..! Popular Malayalam actor Shane Nigam is acting in a new Tamil film.