தண்டுவடம் - எலும்பு பாதிப்பு: நடமாடும் மருத்துவ சேவை

Wait 5 sec.

முதுகுத் தண்டுவடம் மற்றும் எலும்பியல் சாா்ந்த மருத்துவப் பரிசோதனைகளுக்கான நடமாடும் மருத்துவ சேவையை சென்னை வடபழனி காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது. ஹெக்சாவோ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் மருத்துவ சேவையின் மூலம் டிஜிட்டல் எக்ஸ்-ரே, எலும்பு அடா்த்தி பரிசோதனைகள், எலும்பு, மூட்டு மற்றும் முதுகுத் தண்டுவடக் கோளாறுகளை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக, ஆா்தரைடிஸ் (முடக்குவாதம்), ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்பு தேய்மான நோய்), தண்டுவட பிரச்னைகளை தொடக்க நிலையில் அறிந்துகொள்ள முடியும். கிராமப்புற மக்களுக்கு உயா் மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக காவேரி மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.முன்னதாக, அந்த நடமாடும் வாகனத்தை காவேரி மருத்துவமனை நிா்வாகிகளும், ஹெக்சாவோ் நிறுவன நிா்வாகிகளும் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.