ராம் சரண் - 17 திரைப்பட பூஜை விடியோ!

Wait 5 sec.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பூஜை விடியோ வெளியாகியுள்ளது.நடிகர் ராம் சரண் கடைசியாக இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பெத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாபாத்திரம் ஆபாசமாக சித்திரிக்கப்பட்டதாக சர்ச்சையானது. படமும் கலவையான விமர்சனங்களைச் சந்தித்ததால் எதிர்பார்த்தை வெற்றியைப் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில், ராம் சரணின் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. அண்மையில், இப்படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளது. இதில், ராம் சரணின் தந்தை சிரஞ்சீவியும் கலந்துகொண்டார். தற்போது, இதன் பூஜை விடியோவை வெளியிட்டுள்ளனர். ரங்கஸ்தலம் திரைப்படத்திற்குப் பின் ராம் சரணும் சுகுமாரும் 8 ஆண்டுகளுக்குப் பின் இணைவதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுகுமார் புஷ்பா, புஷ்பா - 2 ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்பதால் இப்படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.A video from the pooja (ceremony) for the film directed by Sukumar and starring Ram Charan has been released.