தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!

Wait 5 sec.

தவெகவுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை என மக்களவை உறுப்பினரும் விசிக தலைவருமான தொல். திருமாவளவன் புதன்கிழமை (நவ. 4) தெரிவித்தார்.பாஜக ஆதரவோடு அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் மீது மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார்.இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருப்பதாவது:அந்த முயற்சி நடக்கிறதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று நான் கருதுகிறேன். ஆதரவு நல்கி வருகிற கூட்டணிக் கட்சிகள் தவெகவுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தங்களது ஆதரவைத் திரும்பப் பெறும் வாய்ப்பில்லை என்றபோது, ஆட்சியைக் கவிழ்க்கவும் வாய்ப்பில்லை என நான் பெரிதும் நம்புகிறேன். வேறு எந்த வழியில் அவர்கள் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது என்று தெரிவித்தார். மேலும், தவெக எம்எல்ஏக்களை வைத்தே ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடக்கிறதா? எனற கேள்விக்கு, “தவெக எம்எல்ஏக்கள் அந்த அளவுக்கு பலவீனமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என திருமாவளவன் தெரிவித்தார்.நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்Lok Sabha member and VCK leader Thol. Thirumavalavan stated on Wednesday (Nov. 4) that he would not withdraw the support extended to TVK.