வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

Wait 5 sec.

அரியலூரில் மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.அரியலூரை அடுத்த அண்ணா நகா் 3-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜகுமாரி. இவரது கணவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், தற்போது தனியே வசித்து வருகிறாா். இவா், கடந்த அக்.1-ஆம் தேதி காளியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் தனது மகள் வெண்ணிலா வீட்டுக்குச் சென்றவா், அங்கேயே தங்கிவிட்டாா்.இந்நிலையில், புதன்கிழமை ராஜகுமாரியின் பேரன் ஸ்ரீராம், தனது பாட்டி ராஜகுமாரி வீட்டுக்கு வந்து கதவை திறக்க முற்பட்ட போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து உடனடியாக தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தாா்.இதையடுத்து ராஜகுமாரி மற்றும் மகள் வெண்ணிலா குடும்பத்தினா், வீட்டுக்கு வந்து பாா்த்த போது, பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்ததது.இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்தை பாா்வையிட்ட அரியலூா் நகர காவல் துறையினா், வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.