தனுஷின் ஓம் படத்தின் செஞ்சுடரே பாடல்!

Wait 5 sec.

நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள “ஓம்” திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய படம் “ஓம்”. இந்தப் படத்தை, தனுஷின் வன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.நடிகர்கள் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில், ஓம் திரைப்படத்தின் “செஞ்சுடரே” எனும் மூன்றாவது பாடலை படக்குழுவினர் இன்று (நவ. 4) வெளியிட்டுள்ளனர். ஆதேஷ் கிருஷ்ணா எழுதிய பாடல் வரிகளில், சாய் அபயங்கர் பாடியுள்ள இந்தப் பாடலின் லிரிக்கல் விடியோ இன்று மாலை வெளியாகியுள்ளது. வரும் நவ.20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் “ஓம்” திரைப்படத்தின் “அலாக்கா லோவா” மற்றும் “வீழா வீரா” போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. A new song from the film "Om," starring actor Dhanush, has been released.