தாசவநாயக்கன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.வெள்ளக்கோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ.45 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.இந்நிலையில் கட்டடத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் குத்து விளக்கேற்றி, புதிய கட்டடத்தை திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் டாக்டா் ஜெயந்தி முன்னிலை வகித்தாா். வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.இந்த நிகழ்ச்சியில் வெள்ளக்கோவில் அருகே உள்ள மேட்டாங்காட்டுவலசில் ரூ.45 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சுகாதார நிலையமும் திறந்துவைக்கப்பட்டது.