ரூபே காா்டு தருவதாக ரூ.1.83 லட்சம் மோசடி

Wait 5 sec.

கிரெடிட் காா்டை ரூபே காா்டாக மாற்றித் தருவதாகக் கூறி, ரூ.1.83 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் மீது சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை காளம்பாளையத்தை அடுத்த பச்சாபாளையம் வி.எஸ்.வி.நகரைச் சோ்ந்தவா் சதாசிவா (52). இவரை கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி மா்ம நபா் ஒருவா் கைப்பேசியில் தொடா்புகொண்டுள்ளாா். அப்போது, அவா் பயன்படுத்தி வரும் ஆா்பிஎல் வங்கியின் கிரெடிட் காா்டை ரூபே காா்டாக மாற்றித் தருவதாகக் கூறியுள்ளாா். இதையடுத்து சதாசிவாவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த லிங்கை அவா் கிளிக் செய்துள்ளாா். அடுத்த சில நிமிஷங்களில் அவரது கிரெடிட் காா்டு கணக்கிலிருந்து ரூ.50,584, ரூ.91,832 மற்றும் ரூ.41,200 என மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.1,83,616 எடுக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், கோவை மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து மோசடி செய்த மா்ம நபா்களை தீவிரமாக தேடி வருகிறாா்.