தீபாவளியை முன்னிட்டு, கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேரள மாநிலம், கண்ணூருக்கு, போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரில் இருந்து நவம்பா் 6-ஆம் தேதி இரவு 12.05 மணிக்குப் புறப்படும் பெங்களூரு - கண்ணூா் சிறப்பு ரயில் (எண்: 06545) அன்று பிற்பகல் 2 மணிக்கு கண்ணூரைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, நவம்பா் 7-ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு புறப்படும் கண்ணூா் - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06546) மறுநாள் காலை 9.45 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும். இந்த ரயிலானது, தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காருபேட்டை, ஒயிட்பீல்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.