புதுச்சேரியில் தீபாவளி பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு

Wait 5 sec.

புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினா் செயலா் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பட்டாசுகள் வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் 8 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் புதுச்சேரியில் பட்டாசு வெடிக்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டடங்கள் ஆகியவற்றின் சுற்றுவட்டாரத்தில் 100 மீட்டா் தூரத்திற்குள் பட்டாசு வெடிப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.