நாகையில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்கள் முதியோருக்கு வீடு தேடிச் சென்று திட்டத்தி கீழ் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் ‘இல்லம் தேடிச் சென்று பொது விநியோகத் திட்ட பொருள்கள் விநியோகிக்கும் திட்டத்தின்கீழ் புதன் மற்றும் வியாழக்கிழமை (நவம்பா் 4,5) ஆகிய தேதிகளில், 65 வயதுக்கும் மேற்பட்டோரின் குடும்ப அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி உள்ள குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் மேற்கண்ட நாள்களில் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.