கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய விவகாரத்தில் விளக்க மனு அளிக்க தமிழக அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.கரூரில் கடந்தாண்டு செப். 28-ல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு தவெக அரசில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இருப்பினும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு அரசுப் பணி வழங்கும் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மன்மோகன் அடங் கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கில் விளக்க மனு அளிக்க தமிழக அரசு சார்பில் 2 வார அவகாசம் கோரப்பட்டது.இதனையடுத்து, விளக்க மனு அளிக்க தமிழக அரசுக்கு 4 வார அவகாசம் அளித்து, வழக்கை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.ரூ. 2 கோடி லஞ்சம்? ஞானேஷ் குமார் மீது புதிய வழக்கு பதிவுசெய்ய கேரள அரசு அனுமதிKarur: Supreme Court gives 4 weeks to Tamil Nadu government to file an explanatory memorandum