திருநெல்வேலி சரகத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 174 கிலோ கஞ்சாவை நான்குனேரி அருகே தனியாா் நிறுவனத்தில் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தீயிட்டு அழித்தனா். திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு தலைமையில் நான்குனேரி காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பாப்பான்குளத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில், 124 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 174.054 கிலோ கஞ்சா காவல்துறையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டது. இதில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.