அமெரிக்க தேர்தல் தோல்வி! டிரம்ப்பின் அடுத்த அதிரடி திட்டம்!

Wait 5 sec.

அமெரிக்க இடைக்கால தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், தனது அடுத்த திட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை), பிரதிநிதிகள் சபை (கீழவை) என இரு அவைகளைக் கொண்டது. இதில் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், தோராயமாக மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், அதேநேரத்தில் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, நவ. 3 மாலை நடைபெற்றது.தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 211 இடங்களிலும், குடியரசுக் கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள இடங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.செனட் சபையில் பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 52 இடங்களை கைப்பற்றிவிட்டது. குடியரசுக் கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், மற்ற இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன.டிரம்ப்பின் திட்டம்இந்த நிலையில், தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்ட டிரம்ப், “நாங்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஒருவேளை நான் போட்டியிட்டிருந்தால் நாங்கள் இமாலய வெற்றி பெற்றிருப்போம்” என்று ட்ரூத் சோசியலில் குறிப்பிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில், அமெரிக்க அதிபருக்கான சிறப்பு அதிகாரமான ‘வீட்டோ’வைத் தான் பயன்படுத்தவுள்ளதை குறிக்கும் வகையில் ’வீட்டோ’ என்று அச்சிடப்பட்ட தொப்பியை டிரம்ப் பதிவிட்டுள்ளார்.இதன்மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், ஜனநாயகக் கட்சி நிறைவேற்றும் சட்டத்தை தனது ’வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.முன்னதாக, அமெரிக்க செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளிக்கையில், தேர்தலில் தோற்றால் ஜனநாயகக் கட்சியை செயல்படவிடாமல் தடுப்பேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.கடந்த முறை அதிபராக டிரம்ப் இருந்தபோது, அமெரிக்க நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்ட 10 சட்டங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.Defeat in the US election! Trump’s next bold move!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்