அன்பில் மகேஸுக்கு அடுத்ததாக உயர்கல்வித் துறையில் விசாரணை! அமைச்சர் மரியவில்சன் விளக்கம்

Wait 5 sec.

கடந்த ஆட்சியில் இருந்த உயர்கல்வித் துறையின் மீதும் விசாரணை நடத்தப்படும் என நிதித் துறை அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது குறித்து செய்தியாளர்களுடன் அமைச்சர் மரியவில்சன் பேசியதாவது, "முதல்வரின் மேசையில் இருக்கும் 3 கோப்புகளில் இருந்து ஒரு கோப்பு மட்டும் திறக்கப்பட்டதற்கே திமுகவினர் அலறுகின்றனர். செல்லும் திருமண நிகழ்வுகளிலெல்லாம் தவெக அரசு மீது அவதூறு கூறி வருகின்றனர்.மீதமுள்ள கோப்புகளைத் திறந்தால் என்ன நடக்கும் எனத் தெரியவில்லை. பள்ளிக்கல்வித் துறையில் நடந்த ஊழல் மன்னிக்க முடியாதது.அடிப்படையான சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கல்வித் துறையில் ஊழல் செய்துவிட்டு, தற்போது சிறையில் உணவு வேண்டும், பெயில் வேண்டும் என்று (அன்பில் மகேஸ்) சொல்கிறார்.இதேபோல், உயர்கல்வித் துறையும் கண்டிப்பாக விசாரிக்கப்படும்" என்று தெரிவித்தார்.கடந்த திமுக ஆட்சியில் 1,000-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு பல்வேறு அங்கீகாரம், அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்குமேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக முன்னாள் அமைச்சர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது புகாா் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.இந்த நிலையில், கடந்த ஆட்சியில் இருந்த உயர்கல்வித் துறையிலும் விசாரணை நடத்தப்படவிருப்பதாக அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்.கடந்த திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடியும், கோவி. செழியன் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.கரூர் அரசுப் பணி ரத்து! விளக்க மனு அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 4 வாரங்கள் கெடுWho among the former ministers will be investigated next, after Anbil Mahesh?