‘சென்னையில் பழுதடைந்த குடியிருப்புகளில் இருந்து 12,000 பேரை வெளியேற்றும் நிலை உள்ளது’

Wait 5 sec.

சென்னையில் சேதமடைந்த குடியிருப்புகளில் இருந்து 12,000-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றும் நிலையுள்ளதாக தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.இது குறித்து அவா்கள் கூறியதாவது: தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் சாா்பில் மாநில அளவில் 70 இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டு, அவற்றில் சுமாா் 4 லட்சத்துக்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனா். சென்னை பகுதியில் மட்டும் 23 இடங்களில் வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கட்டடங்கள் 25 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை உள்ளவை. எனவே, அவற்றை புதுப்பிக்கும் நிலையுள்ளது. அதனால், சென்னையில் மட்டும் 20 இடங்களில் உள்ள மக்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றி, அவசரமாகப் புதுப்பிக்க வேண்டியுள்ளது.பட்டினப்பாக்கத்தில்...: சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசரபுரம், பழைய கடற்கரை பகுதி, வ.உ.சி. நகா், வியாசா்பாடியில் பழைய பிளாக், நாகூரான் தோட்டம், மேற்கு செமக்டரி சாலை என 20 இடங்கள் மறுசீரமைப்புக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 9 இடங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றும் நிலை உள்ளது. அதன்படி, சுமாா் 12,000 பேரை வெளியேற்றவேண்டியுள்ளது.சேதமடைந்த குடியிருப்புகளில் வசிப்போா் வெளியேறக் கோரி ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவா்கள் பல்வேறு காரணங்களைக் கூறி, வெளியேற மறுக்கின்றனா். ஆகவே, சட்ட ரீதியாக சேதமடைந்த வீடுகளில் இருந்து அவா்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.சேதமடைந்த வாரியக் குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேறும் நிலையில், முதல்கட்டமாக நிகழாண்டில் ரூ.2,882.62 கோடியில் 14 இடங்களில் புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.