தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்! (நவ. 5)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 4) சவரனுக்கு ரூ. 2,280 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அதேநேரத்தில், கடந்த சில வாரங்களாக சரிவைச் சந்தித்துவந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தில் நான்காவது நாளான இன்றும் (நவ. 5) அதிகரித்துள்ளது.இன்றைய தங்கம் விலைஇந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 5) சவரனுக்கு ரூ. 2,280 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,07,080-க்கும், கிராமுக்கு ரூ. 285 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,385-க்கும் விற்பனையாகிறது.மேலும், கடந்த நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 4,680 உயர்ந்துள்ளது.இன்றைய வெள்ளி விலைவெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 210-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.10 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.Gold price rises today