யேமனின் ஹௌதி கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராகக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40,000-க்கும் அதிகமான ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, அரசுப்படைகள் அறிவித்துள்ளன. யேமன் நாட்டில், சௌதி அரேபியாவின் ஆதரவுபெற்ற அரசுப்படைகளுக்கும், ஈரானின் ஆதரவுபெற்ற ஹௌதிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல்கள் வெடித்துள்ளன. இந்த உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த அக்.5 ஆம் தேதி தொடங்கப்பட்ட “ஆபரேஷன் டான்” மூலம் அந்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஹௌதிகளின் கட்டமைப்புகளைக் குறிவைத்து 40,761 ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, யேமன் அரசு இன்று (நவ. 5) அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம், சுமார் 20,000 ஹௌதி வீரர்கள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டோ, படுகாயமடைந்தோ அல்லது வேறு ஏதேனும் வழிகளிலிலோ போர்க்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபற்றி ஹௌதி படைகளின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரைத் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக, ஈரான் மீதான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி சௌதிக்கு எதிரான நடவடிக்கைகளை ஹௌதிகள் மேற்கொண்டன. இத்துடன், செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணை வழியாகச் செல்வதற்கு சௌதி கப்பல்களுக்கு ஹௌதிகள் தடை விதித்ததைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.சர்வதேச போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!Government forces have announced that more than 40,000 military operations have been carried out against the Houthi rebel forces in Yemen over the past month alone.