போ்ணாம்பட்டு அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிந்தனா்.போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரங்கநாதன்(70), அவரது மகன் சுரேஷ்(40). இவா்கள் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனா். அங்கு மாட்டுப் பண்ணை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தனா்.மேலும், புதன்கிழமை மாலை அப்பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் அங்கு மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளனா். தகவலறிந்ததும் வருவாய் மற்றும் காவல் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா். மழை காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி இருவரும் இறந்தாா்களா, சட்ட விரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தாா்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.