தீபாவளிக்கு அரசன் புரோமோ இல்லையா?

Wait 5 sec.

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்படத்தின் புதிய புரோமோ வெளியாகாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது. கேங்ஸ்டர் கதையான இதில் பலர் நடித்து வருகின்றனர். இதுவரை சென்னை, மதுரையில் இரண்டு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், 50 சதவீத படப்பிடிப்பே முடிந்ததாகவும் கூறப்படுகிறது.அரசன் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், பணிகள் முடிவடையாததால் அடுத்தாண்டுக்குச் செல்கிறது. இதனால், தீபாவளியன்று அரசன் திரைப்படத்தின் சிறப்பு புரோமோவும் வெளியாவதாகக் கூறப்பட்டது.பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் நடித்த இந்த புரோமோ 8 நிமிட கால அளவில் இருப்பதாகத் தகவல் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.இந்த நிலையில், புரோமோவுக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்தாலும் அனிருத்தின் பின்னணி இசை இன்னும் கிடைக்கவில்லையாம். தன் திருமண பரபரப்பில் இருப்பதால் அனிருத்தால் அரசனுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பதாகவும் இதனால் டிசம்பர் முதல் வாரத்தில்தான் அரசன் புரோமோ வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையா இல்லையா என்பதை தயாரிப்பு நிறுவனம்தான் விளக்கமளிக்க வேண்டும்!நஸ்ரியா 12 ஆண்டுகளாகத் தமிழில் நடிக்காததற்கு காரணம் இதுதானா?Reports indicate that no new promo will be released for the film Arasan, starring actor Silambarasan.