அமெரிக்க இடைக்கால தேர்தல்! இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி!

Wait 5 sec.

அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகின்றது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவிக்காலத்தின் மத்தியில், அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் (கீழவை) உள்ள 435 இடங்களுக்கும், செனட்டில் (மேலவை) உள்ள 35 இடங்களுக்கும், 36 மாகாண ஆளுநா் பதவிகளுக்கும், சில உள்ளாட்சி நிா்வாக அதிகாரிகள் இடங்களுக்கும் இடைக்காலத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.வாக்குப்பதிவு முடிந்தவுடன் செவ்வாய்க்கிழமை இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அதிபா் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. பிரதிநிதிகள் அவையில் (மொத்தம் 435) பெரும்பான்மை பெற 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயக கட்சி 242 இடங்களிலும், டிரம்ப்பின் குடியரசு கட்சி 151 இடங்களிலும் வெற்றி பெற்றன (இந்திய நேரப்படி நவ. 5 காலை 10 மணி நிலவரம்). இதன்மூலம் பிரதிநிதிகள் அவையானது ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.செனட் அவைக்கு தோ்தல் நடைபெற்ற 35 இடங்களில் 20 இடங்களில் ஜனநாயக கட்சியும், 13-இல் குடியரசு கட்சியும் வெற்றி பெற்றன. செனட் அவையில் பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயக கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது. குடியரசு கட்சிக்கு 44 எம்.பி.க்களே உள்ளனா். இதன்மூலம் நாடாளுமன்ற இரு அவைகளும் ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன.இந்த நிலையில், பிரதிநிதிகள் அவையில் மீதமுள்ள 42 இடங்களுக்கும், செனட் அவையில் 2 இடங்களுக்கும் இன்னும் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி 24 மணிநேரத்தைக் கடந்தும் முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகின்றது. இந்த இடங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஓரிரு நாள்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.US midterm elections! Delay in the announcement of final results!நாடாளுமன்றத்தை இழந்த டிரம்ப்! அடுத்த 2 ஆண்டுகளை எப்படி சமாளிக்கப் போகிறார்?