பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? (நவ. 5)

Wait 5 sec.

அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.முரசு புயல் ஆந்திர கடற்கரையையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையைக் கடந்த நிலையில் அதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் இன்று (நவ. 5) அடுத்த 3 மணி நேரத்திற்கு (பகல் 1 மணி வரை) தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/v9CdasCNQP— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 5, 2026TN Rain update for next 3 hours