சாம்பியன்ஸ் லீக்கில் கோமோ 1907 முதல் அணியாக வெளியூர் மண்ணில் நடந்த போட்டியில் அதிக கோல்கள் (9) அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் மிகப்பெரிய கால்பந்துத் தொடரான சாம்பியன்ஸ் லீக்கில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோமோ அணி இந்த சீசனில்தான் முதல்முறையாக பங்கேற்றுள்ளது. அறிமுக சீசனிலேயே கோமோ அணி பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது. நள்ளிரவு நடந்த போட்டியில் லென்ஸ் அணியுடன் கோமோ மோதியது. இந்தப் போட்டியில் கோமோ 9-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இதில் கோமோ அணியின் டாசோஸ் டூவிகாஸ் 7, 32, 57ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.நிகோ பாஸ் 2 அசிஸ்ட், ஒரு கோல் (40’) அடித்தார். குன்யா (47’), கெம்ப் (53’), லிபரேலி (62’), படூரினா (69’), பாப்பாச்சியோலி (90+2’) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து வரலாற்று வெற்றிக்கு உதவினார்கள். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய வெற்றியாக இருக்கிறது. அத்துடன் வெளியூர் மண்ணில் அதிகபட்ச கோல் அடித்த அணியாகவும் கோமோ சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் ஸ்பெயினில் உயிரிழந்த ஜூசஸ் மிகைல் உருவப்படம் பதிந்த ஜெர்ஸியை தூக்கிப் பிடித்து கொண்டாடினார். 18 வயதான பாப்பாச்சியோலி சீரி ஏ போட்டியில்கூட விளையாடாமல் நேரடியாக சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்று கோல் அடித்துள்ளார். இந்த வெற்றியுடன் கோமோ அணி சாம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆர்செனல் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன.A historic night in Lens! ⏹️ pic.twitter.com/P1OqwQzZxh— Como1907 (@Como_1907) November 4, 2026▪️ Lens 1-9 Como (2026) ▪️ Real Madrid 8-0 Malmö (2015)▪️ Liverpool 8-0 Beşiktaş (2007)Como making history #UCL pic.twitter.com/mSbmhcLpHG— UEFA Champions League (@ChampionsLeague) November 4, 202617 நிமிஷத்தில் 4 கோல்கள்..! சாம்பியன்ஸ் லீக்கில் புதிய வரலாறு படைத்த பிஎஸ்ஜி!Como becomes 1st away team to score 9 goals in a Champions League match