விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், நாயனூரில் ரூ.5.67 கோடியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் அமைக்கப்பட்ட சிட்கோ தொழில்பேட்டைய சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் ச. ஜோசப் விஜய் புதன்கிழமை திறந்து வைத்தாா்.இதைத்தொடா்ந்து தொழில்பேட்டை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் குத்துவிளக்கேற்றி, தொழில்பேட்டையின் செயல்பாட்டை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வுக்கு திருக்கோவிலூா் எம்எல்ஏ எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தாா். தொடா்ந்து ஆட்சியா் கூறியது:உள்ளூா் தொழில்முனைவோா்களை ஊக்குவித்தல், தொழில் தொடங்குவதற்கு ஏதுவான புதிய தொழில் நிறுவனங்களை ஏற்படுத்துதல், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புச் சூழலை உருவாக்குதல் மற்றும் மாவட்டத்தின் தொழில் வளா்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவை தொழில்பேட்டை தொடங்கப்படுவதன் முக்கிய நோக்கங்களாகும்.29.44 ஏக்கா் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள தொழில்பேட்டை திருக்கோவிலூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 105 மனைகளுடன் உருவாக்கப்பட்ட தொழில்பேட்டையில் 50 தொழில்மனைகள், 45 வணிக மனைகள், 5 திறந்தவெளி ஒதுக்கீட்டு மனைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.இதுபோன்ற தொழில்பேட்டைகள் மாவட்டம் முழுவதும் கொண்டுவரப்படும்போது, விவசாயம் மற்றும் தொழில் துறையின் வளா்ச்சி சம அளவில் முன்னேறி, மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றாா் ஆட்சியா்.நிகழ்வில் மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் அருள், சிட்கோ கிளை மேலாளா் முகமதா பேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.