சாம்பியன்ஸ் லீக்கில் நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி அணி 17 நிமிஷங்களில் 4 கோல்கள் அடித்து, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஐரோப்பிய கணத்தில் நடைபெறும் மிகப்பெரிய கால்பந்துத் தொடரான சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக முதல் 17 நிமிஷங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சாம்பியன்ஸ் லீக்கில் வில்லா ரியல் அணி தனது சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி உடன் மோதியது. இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணியில் நட்சத்திர வீரர்கள் நான்கு பேர் இல்லாமலே களமிறங்கினார்கள். அப்படி இருந்தும் இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணி முதல் 17 நிமிஷங்களில் 4 கோல்கள் அடித்து வரலாறு படைத்துள்ளார்கள். ஜாவோ நவெஸ் 9ஆவது நிமிஷத்திலும், டோவோ 12ஆவது நிமிஷத்திலும், மயிலு 13ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தனர். ஃபேபியன் ரூயுஸ் 17, 50ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார். டேவிட் போலே 78ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இறுதியில் 6-0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி வென்றது. வில்லா ரியல் அணி ஒருகோல்கூட அடிக்காமல் திணறியது. இதில் பிஎஸ்ஜி அணியினர் 67 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தார்கள். 23 ஷாட்டுகளில் 12 முறை இலக்கை நோக்கி அடித்தார்கள். இந்த வெற்றியுடன் 4 சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்திலும் வென்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. பார்சிலோனா இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. பிஎஸ்ஜி அணியில் டெம்பெலே, மார்க்கினோஸ், நுனோ மெண்டிஸ், க்விச்சா க்வராட்ஸ்கேலியா காயத்தினால் அணியில் விளையாடவில்லை என்பது கவனிக்கதக்கது. 6️⃣ pic.twitter.com/AW3zrK9C0O— Paris Saint-Germain (@PSG_inside) November 3, 2026ஆட்ட நாயகன் விருதை உயிரிழந்த கால்பந்து வீரருக்கு சமர்ப்பித்த ரபீனியா! PSG breaks Champions League record with four goals in first 17 minutes of mismatch at Villarreal