திருவனந்தபுரம் - மங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணித்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் 2025 - 26 நிதியாண்டில் 189.35% இருக்கைகள் நிரம்பியுள்ளன. 2025-26 நிதியாண்டில் வந்தே பாரத் ரயிகளில் ஒட்டுமொத்தமாக 99.10% இருக்கைகள் நிரம்பிய விகிதம் பதிவாகியுள்ளது.நாட்டில் 2019 ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் பயணிகளுக்கு சொகுசுப் பயணத்தை வழங்கும் நோக்கத்திலும் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில், 2025 - 2026 நிதியாண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக வந்தே பாரத் ரயிலில் 99.10% இருக்கைகள் நிரம்பிய பயணத்தை பதிவு செய்துள்ளன. நாட்டில் படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில், 2026 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹெளரா முதல் காமக்யா வரையிலான இந்த ரயில் சேவையில் 114.54% இருக்கைகள் நிரம்பின. இதே காலகட்டத்தில், அதிகபட்சமாக திருவனந்தபுரம் - மங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் இருக்கை 189.35% நிரம்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், எண் 20631 கொண்ட வந்தே பாரத் ரயில், மங்களூரு - திருவனந்தபுரம் இடையே பயணிக்கையில் 174.77% இருக்கைகள் நிரம்பியிருந்தன. மறுமார்க்கத்தில் வண்டி எண் 20632 கொண்ட வந்தே பாரத் ரயிலில் அதிகபட்சமாக 189.35% இருக்கைகள் நிரம்பியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் சாதனையை முறியடிக்கும் ரயில் வழித்தடம்! ரூ. 1.31 லட்சம் கோடியில் அரசு திட்டம்!Thiruvananthapuram-Mangaluru Vande Bharat train has recorded the highest passenger occupancy at 189.35%