ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (நவ. 5) மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னணி நடிகர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய், நடிகை த்ரிஷா மற்றும் முதல்வரின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், இந்த நிகழ்ச்சியில், பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.கமல் ஹாசன் - அருண் குமார் படத்தின் அப்டேட்! TN CM Vijay attended the wedding reception held at the residence of former Andhra Pradesh Chief Minister Jagan Mohan Reddy.