மெலனியா டிரம்ப்புக்கு உக்ரைனின் உயரிய விருது!

Wait 5 sec.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்புக்கு உக்ரைனின் உயரிய விருது வழங்கப்படும் என அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றும் வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகளின் தலையீட்டில் நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ரஷியா ஆக்கிரமித்துள்ள ஒலேஷ்கி பகுதியில் தற்காலிகப் போர்நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தார். இதையடுத்து, அப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் தற்காலிகப் போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு அங்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சிக்கியிருந்த உக்ரைனிய மக்கள் மீட்கப்பட்டனர்.இந்த நிலையில், மெலனியா டிரம்ப்பின் இந்த முயற்சியைப் பாராட்டி அவருக்கு உக்ரைனின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆர்டர் ஆஃப் ஓல்கா, ஃபர்ஸ்ட் கிளாஸ் எனும் விருது வழங்கப்படும் என உக்ரைனிய அதிபர் ஸெலன்ஸ்கி இன்று (நவ. 5) அறிவித்துள்ளார். போர்களுக்கு இடையே மிகவும் அரிதான இவ்வகை போர்நிறுத்தத்தை அமல்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட மெலனியா டிரம்ப், ரஷியா - உக்ரைன் பிரதிநிதிகளை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொள்வேன் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆதரவை இழந்த நெதன்யாகு! இஸ்ரேலின் புதிய பிரதமர் ஐசென்கோட்?President Zelenskyy has announced that U.S. First lady Melania Trump will be awarded one of Ukraine’s highest honors.