ரயில் தண்டவாளங்கள் அருகே பட்டாசு வெடிக்காதீர்கள்! -தெற்கு ரயில்வே

Wait 5 sec.

ரயில் தண்டவாளங்கள் அருகே பட்டாசு வெடிக்காமல், பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:”தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுங்கள்!ரயில் பாதைகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பது மிகவும் ஆபத்தானது. பட்டாசுகளிலிருந்து சிதறும் தீப்பொறிகளால் அந்த வழியே கடந்து செல்லும் ரயில்களில் எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளது. மேலும், அதிலிருந்து வரும் புகை ரயில் ஓட்டுநர்களின் (லோகோ பைலட்டுகளின்) பார்வையை மறைத்து, பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கலாம். ரயில்வே பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றுங்கள்; பாதுகாப்பான மற்றும் திறந்தவெளிகளில் மட்டுமே தீபாவளியைக் கொண்டாடுங்கள்.பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி விபத்துகளைத் தவிர்ப்போம்” என்று குறிப்பிடப்பிட்டுள்ளது.Southern Railway has advised people to celebrate a safe Diwali by following safety guidelines and avoiding the bursting of firecrackers near railway tracks.ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை! ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை