நேபாள பெரு வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை (செப். 2) 1,204 ஆக உயர்ந்துள்ளது.திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது.சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.இந்தப் இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 1200-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், காணாமல் போன 4000-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. கடந்த 8 நாள்களாக நேபாள தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம் மற்றும் பிற நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகளால் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், நேபாள பேரிடருக்கு முக்கிய காரணமாக விளங்கும் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் தார்மிக பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்று நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிசிர் கானல் இன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.பெருவெள்ளத்துக்கு அமெரிக்கா, சீனா, இந்தியாவே தார்மிக பொறுப்பு! நேபாளம் திட்டவட்டம்!The death toll from the massive floods in Nepal rose to 1,204 on Wednesday (Sept. 2).