ரீல்ஸ்களை உருவாக்குவதில் பிரதமர் மோடி தீவிரம் காட்டி வருகிறார் என ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் புதன்கிழமை (செப். 2) பேசினார்.பிகாரில் போட்டித் தேர்வுகளில் குளறுபடி, வினாத்தாள் கசிவு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:இளைஞர்கள் ஏற்கெனவே இந்த அரசாங்கத்திற்கு எதிராக உள்ளனர். முடிவெடுக்கும் மற்றும் கொள்கை வகுக்கும் செயல்பாடுகளில் இளைஞர்கள் சுதந்திரமாகப் பங்கேற்றால், அதைவிடச் சிறந்தது வேறு என்ன இருக்க முடியும்? அதைத்தான் நாம் அனைவரும் விரும்புகிறோம். பிகார் மிக இளமையான மாநிலமாகும், அதன் மக்கள் தொகையில் 60 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர்.எனவே, கட்சியில் ஆட்களைச் சேர்க்கும்போது ஒவ்வொரு முடிவும் கவனமாக எடுக்கப்படுகிறது. இப்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது, அந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறுவதை காண்கிறோம். ஆனால் இன்றும்கூட, இந்தியாவின் தனிநபர் வருமானம் பூட்டான் மற்றும் சில அண்டை நாடுகளை விடக் குறைவாக இருக்கிறது. ரீல்ஸ்களை உருவாக்குவதில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் அவர் யதார்த்தத்தைப் பார்க்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.VIDEO | Patna: RJD leader Tejashwi Yadav (@yadavtejashwi) says, “The youth are already against this government. And, as you know, if young people independently come into decision-making and policymaking, what could be better than that? We all want that. Bihar is the youngest… pic.twitter.com/4C3cVe42Pr— Press Trust of India (@PTI_News) September 2, 2026ஹிமாசலில் 150 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை; 3,500 பள்ளிகளில் 1 ஆசிரியர் மட்டும்!RJD leader Tejashwi Yadav said on Wednesday (Sept. 2) that Prime Minister Modi is showing keen interest in creating Reels.