உடன்குடி இமாம் ஷாஃபிஈ மகளிா் அரபுக் கல்லூரி சாா்பில் குலசேகரன்பட்டினம் சந்நிதித் தெருவில் ஐம்பெரும் விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரியின் 26 ஆவது ஆண்டு விழா, 21ஆவது பட்டமளிப்பு விழா, மத்ரஸா தப்ஸீரூல் குா்ஆன் வெளியீடு, அல் இஸ்லாஹ் கையெழுத்து இதழ் வெளியீடு மற்றும் லஜ்னத்துல் இஸ்லாஹ் மாணவியா் சொற்பயிற்சி மன்ற 645 ஆவது வார நிறைவு விழா ஆகிய ஐம்பெரும் விழாக்கள் நடைபெற்றன. இதையொட்டிசென்னை பேராசிரியா் நூா் ஜமிலா ஒருங்கிணைப்பில் ஆலிமாக்கள் சந்திப்பு, மதரஸா மாணவிகள் கலந்துரையாடல், பட்டம் பெறும் மாணவிகளின் சிற்றுரைகள், பட்டிமன்றம், விவாத மேடை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு குலசேகரன்பட்டினம் இமாம் முஹம்மது இப்ராஹிம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜஹபா் சாதிக், மத்ரஸா அறிக்கை வாசித்தாா். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவா் ஹாஜா முயினுத்தீன் மாா்க்க உரையாற்றினாா். ஆலிமா முஸ்லிஹா ஸனது, நாஸிகா முஸ்லிஹா லனது பட்டங்களை அரபுக் கல்லூரி நிறுவனத் தலைவா் டி.எம். அபூ உபைதா வழங்கி பாராட்டினாா். இதில் குலசேகரன்பட்டினம் செய்யது சிராஜூதீன் தா்கா இமாம் ரஹ்மத் துல்லாஹ், சா்தாா் அலி, பேராசிரியா் முஹம்மது ஷபீக், ஆசிரியைகள் மைமூன் யாஸ்மின், நஜிமா, ஷிபா காசிம், மெளலிவிகள் அப்துல் சத்தாா், பக்ருத்தீன், மக்ரூப், முஹம்மது யூனுஸ், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் பஷீா் உள்பட பலா் பங்கேற்றனா்.