ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சேலம் உட்கோட்ட போதை தடுப்பு பிரிவு போலீஸாா் ஜோலாா்பேட்டை மாா்க்கமாக சென்ற விரைவு ரயில்களில் சோதனை மேற்கொண்டனா்.அப்போது மேற்குவங்க மாநிலம் ராதிகாப்பூரிலிருந்து கா்நாடக மாநிலம் பெங்களூரு வரை சென்ற ரயிலில் பயணிகளின் இருக்கையின் கீழ் கேட்பாரற்று கிடந்த பையில் 8 கிலோ போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. அதனை போலீஸாா் பறிமுதல் செய்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினா்.