தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்! (செப். 4)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 4) சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த செப். 2-இல் சவரனுக்கு ரூ. 1,800 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனையானது.இதையடுத்து, வியாழக்கிழமை விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 290 உயர்ந்து ரூ. 14,240-க்கும், சவரனுக்கு ரூ. 2,320 உயர்ந்து ரூ. 1,13,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 4) சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,880-க்கும் கிராமுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,360-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 255-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.The price of ornamental gold in Chennai has increased by Rs. 960 per sovereign today (Sept. 4).தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை!