பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை 9,000 கனஅடியாக குறைந்துள்ளது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 9,000 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவாா் பாணி, பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளது. அருவிகளில் நீா்வரத்து குறைந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடா்ந்து 19-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.Water inflow to Hogenakkal drops to 9,000 cusecs; coracle operations suspended for the 19th dayமேட்டூா் அணைக்கு நீா்வரத்து 7,790 கனஅடி: செப்.4 நிலவரம்!