ஓடிடியில் வெளியான அருள்நிதியின் அருள்வான்!

Wait 5 sec.

அருள்நிதியின் அருள்வான் திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று(செப். 4) வெளியாகியுள்ளது.நடிகர் அருள்நிதி ’அருள்வான்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை கணேஷ் விநாயகன் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில், நடிகர்கள் ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், ஜான் விஜய், விடிவி கணேஷ், கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மலைவாழ் பழங்குடியின சிறுமியின் கல்விப் போராட்டமும், அவருக்கு உதவும் மாவட்ட ஆட்சியர் முத்துவேலின் (அருள்நிதி) முயற்சியையும் மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.90 பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில் உருவான அருள்வான் படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த ஜூலை 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இந்த நிலையில், அருள்வான் திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.Arulnithi's film Arulvaaan has been released on an OTT platform today (Sept. 4).ஓடிடியில் காணக் கிடைக்கும் சிரித்துக்கொண்டே பார்க்க வேண்டிய திரைப்படம்!