உக்ரைனுக்கு அமெரிக்கா சார்பில் வழங்கப்பட்ட நிதியுதவியை திருப்பிச் செலுத்துமாறு ஐரோப்பிய நாடுகளிடம் கேட்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ரஷியா உடனான உக்ரைனின் போரைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தில் உக்ரைனுக்கு கோடிக்கணக்கான டாலர் நிதியுதவி அளிக்கப்பட்டன. இதைத் தற்போதைய அதிபர் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஐரோப்பியர்கள் பெரும் பங்கெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்க அரசு வழங்கிய நிதியுதவியைத் திருப்பிச் செலுத்துமாறு ஐரோப்பிய நாடுகளிடம் கேட்கப்போவதாக, அதிபர் டிரம்ப் கூறியுள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.இதுபற்றி, வியாழக்கிழமை (செப். 3) அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள், உக்ரைன் மற்றும் நேட்டோ அமைப்புக்கு இலவசமாக வழங்கப்பட்டன. ஐரோப்பாவிடம் கேட்டிருந்தார் அவர்களே அந்தத் தொகையைச் செலுத்தியிருப்பார்கள். ஆனால், சற்று தாமதமாகவேனும் அந்தப் பணத்தை நாங்கள் திரும்பக் கேட்போம்” எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவில், எந்தெந்த நாடுகள் இதில் அடங்கும் என அவர் குறிப்பிடாத நிலையில், இந்த விவகாரம் இணையவாசிகள் இடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.டிரம்ப்பின் விருப்பமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி!Trump has stated that he intends to ask Europeans to repay the financial aid provided to Ukraine on behalf of the United States.