தில்லியில் கனமழை எதிரொலி: விமான சேவை பாதிப்பு!

Wait 5 sec.

புதுதில்லி: புதுதில்லியில் இன்று  கொட்டித் தீர்த்த கனமழையால், தில்லி விமான நிலையத்தின் 2 மற்றும் 3 அணுகு சாலை மற்றும் முன்பகுதியில் மழைநீர் தேங்கியதால் விமான சேவை பாதிக்கப்பட்டது.கருமேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்ததால், விமான நிலையத்திலும் வெள்ள நீர் சூழ்ந்து விமான சேவை பாதிக்கப்பட்டது. இரண்டு முனையங்களுக்குள் அதிகப்படியான மழைநீர் புகுந்ததாகவும், பிறகு மழைநீர் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.வானம் கருமேகங்களால் சூழப்பட்டிருந்த நிலையில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டதன் காரணமாக குறைந்தது ஒன்பது விமானங்கள் மாற்று இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. இதில் 4 விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் லக்னோவிற்கும், ஒரு விமானம் அகமதாபாத்திற்கும் திருப்பி விடப்பட்டன.Delhi airport experienced water logging at Terminal 2 and 3.டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!