ஐபோன் 18 உடன் வெளியாகும் மடிக்கக்கூடிய ஐபோன்! விலை நிலவரம் வெளியானது!

Wait 5 sec.

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் (Foldable iPhone) அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. ஐபோன் 18 ப்ரோ உடன் மடிக்கக் கூடிய ஐபோனை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதுமே அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் உள்ளனர். தற்போது ஐபோன் 18 வரிசை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இத்துடன் மடிக்கக் கூடிய ஐபோனையும் வெளியிடவுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில் முதல்முறையாக மடிக்கக் கூடிய ஐபோன் வெளியாகவுள்ளதால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், செப். 9 ஆம் தேதி வெளியாகும் ஐபோன் 18 ப்ரோ உடன் வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதன் விலை நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 256GB நினைவகம் கொண்ட மடிக்கக்கூடிய ஐபோன் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் 3699 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 2,50,800.இதேபோன்று 512GB நினைவகம் கொண்ட மடிக்கக்கூடிய ஐபோன் விலை ரூ. 2,84,700. 1TB நினைவகம் கொண்ட மடிக்கக்கூடிய ஐபோன் விலை ரூ. 3,18,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 22% தள்ளுபடியில் கிடைக்கும் ஷாவ்மியின் 55 அங்குல ஸ்மார்ட் டிவி!Leaked Foldable iPhone Prices Start at 2,50,800 in Australia