விஷால் - துரை செந்தில்குமார் கூட்டணியில் புதிய திரைப்படம்?

Wait 5 sec.

நடிகர் விஷால் மீண்டும் ஆக்‌ஷன் திரைப்படமொன்றில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக தயாரான 'மகுடம்’ திரைப்படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமானார். மூன்று வித்தியாசமான தோற்றங்களில் விஷால் நடித்த இப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், நடிகர் விஷாலின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருடன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் நடிகர் விஷாலின் அடுத்த படத்தை இயக்குகிறாராம். கடைசியாக துரை செந்தில்குமார் நடிகர் லெஜெண்ட் சரவணனை வைத்து லீடர் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், அப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சூர்யா - 49 திரைப்படத்தை இயக்கும் எச். வினோத்... நாயகி இவரா? Reports indicate that actor Vishal is set to star in another action movie.