அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.The Chennai Regional Meteorological Centre has stated that there is a possibility of rain in 19 districts, including Chennai, over the next three hours.மழை பொய்த்ததால் நிலக்கோட்டை பகுதியில்வாடிவதங்கும் மல்லிகைப்பூ செடிகள்! விவசாயிகள் கவலை