ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் வீரராக விளையாட மகேந்திர சிங் தோனி விரும்பவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவில்லை. ஆரம்பத்தில் சில போட்டிகளில் மட்டும் விளையாட மாட்டார் எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் அவர் தொடர் முழுவதுமே விளையாட முடியாத சூழல் உருவானது.நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாட நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீஃபன் பிளெமிங் விலகியதால், சிஎஸ்கேவின் பயிற்சியாளராக தோனி செயல்படவுள்ளார் என்ற செய்திகளும் வலம் வந்தன.இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் வீரராக தொடர விருப்பமில்லை என தோனி தன்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் வீரராக தொடர மாட்டேன் என தோனி தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறினார். அவர் அவரை முழுநேர விக்கெட் கீப்பராகவே பார்க்கிறார். அதனால், அவரால் இம்பாக்ட் வீரராக விளையாட முடியாது. ஆனால், அவர் இம்பாக்ட் வீரராக விளையாடினால் அது சிஎஸ்கேவுக்கு மிகவும் நன்றான விஷயமாக இருக்கும் என நான் உணர்கிறேன்.அவரது உடல் நீண்ட நேரம் விக்கெட் கீப்பிங் செய்ய ஒத்துழைக்காது. இதனை ஸ்டீஃபன் பிளெமிங்கும் கூறியிருந்தார். அவர் 16 ஓவர்களுக்குப் பிறகுதான் பேட்டிங் செய்யப் போகிறார். அவர் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடப் போவதில்லை என்பதால், இம்பாக்ட் வீரர் விதி அவருக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றார்.45 வயதாகும் எம்.எஸ்.தோனி கடந்த சில சீசன்களாக அவரது உடல் தகுதியுடன் போராடி வருகிறார். இதனால், ஐபிஎல் தொடரில் அவரது எதிர்காலம் என்னெவென்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ள எம்.எஸ்.தோனி, கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலிருந்து ஒரு சாதாரண வீரராகவே அணியில் தொடர்கிறார். மேலும், 2024 ஆம் ஆண்டிலிருந்து அவரை நீண்ட நேரம் பேட்டிங்கில் களத்தில் பார்ப்பது என்பது வெகுவாக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.Former Indian player Subramaniam Badrinath has stated that Mahendra Singh Dhoni does not wish to play as an 'Impact Player' in the IPL.பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!