சென்னை விமான நிலைய முதல் முனையத்தில் புதிய வசதி! செப்டம்பர் இறுதியில்

Wait 5 sec.

சென்னை விமான நிலையத்தின் முதல் முனையத்திலிருந்து வெளியேறும் பயணிகள், அதன் நுழைவு வாயிலில் இருந்தே வாடகை வாகனங்களில் ஏறிச் செல்லும் வசதி விரைவில் கொண்டுவரப்படவிருக்கிறது.சென்னை விமான நிலையத்துக்குள், பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு உள்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில், தற்போது முதல் முனையத்திலிருந்து வெளியறும் பயணிகள், சொந்த வாகனமாக இருந்தால் அங்கேயே ஏறிக் கொள்ள முடியும். ஆனால், செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும் கார் உள்ளிட்ட வாகனங்களை வெளியே வந்து அதற்குரிய இடத்தில் மட்டுமே ஏற முடியும். இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை அடைந்து வந்தனர்.இதற்கான வாகனக் கூடம் ஒன்று உருவாக்கப்பட்டு இறுதிக் கட்டத்தில் உள்ளது. பணிகள் நிறைவடைந்ததும், முதல் முனையத்துக்கு அருகேயே, பயணிகள் வாடகை வாகனங்களில் ஏறிச் செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாள்தோறும் இந்த முனையத்திலிருந்து சுமார் 33 ஆயிரம் பேர் வெளியே வருகிறார்கள். இதில் குறைந்தது 10 ஆயிரம் பயணிகளாவது வாடகை வாகனங்களில்தான் வெளியேறுவார்கள். இவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த வாகனக் கூடமானது ரூ.28 கோடிச் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கூடம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், முதல் முனையத்திலிருந்து வெளியே வரும் பயணிகள் நேராக இங்கிருந்து வாகனங்களில் ஏறிச் செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.