காளையாா்கோவிலில் மிதிவண்டிப் பந்தயம்

Wait 5 sec.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் மிதிவண்டிக் கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, மிதிவண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மிதிவண்டி ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவது குறித்தும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவது குறித்தும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பந்தயம் நடத்தப்பட்டது.போட்டிகள் மொத்தம் 6 பிரிவுகளாக நடைபெற்றன. இதில் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியாகவும், இதேபோல, 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. பொதுப் பிரிவில் 30 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாகப் போட்டிகளும், 50 வயதுக்குள்பட்ட மூத்தோா் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாகப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத் தொகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்தப் பந்தயத்தில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.