இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Wait 5 sec.

ராமநாதபுரம், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, இதர கல்வி நிறுவனங்களுக்கு வரும் 11 -ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருகிற 11-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் 69-வது நினைவு நாள் அமைதியாக நடைபெறவும், சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கவும், மாணவ, மாணவிகளின் நலன் கருதி, அன்றையதினம் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையாா்கோவில், தேவகோட்டை, சாக்கோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், இதர கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக வேறு ஒரு நாளில் பள்ளி, கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்றாா் அவா்.