இல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!

Wait 5 sec.

ராணிப்பேட்டையில் இல்லாத ஒரு டயர் தொழிற்சாலையை மூடுவது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.இல்லாத தொழிற்சாலையை மூடுவது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றிருக்கிறதே என்று அறிந்து மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில், பல்வேறு கட்சியினரும் இது குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.தமிழக சட்டப்பேரவையில் பேசிய ராணிப்பேட்டை தவெக எம்எல்ஏ தாஹிரா, தங்களது தொகுதியில் ஜே.கே. டயர் தொழிற்சாலை இருக்கிறது. இங்கு டயர்கள் எரிக்கப்படுவதால் மாசற்ற சூழல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மக்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தவெக அரசு இந்த ஆலையை மூட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இதற்கு பதிலளித்த தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, தமிழ்நாட்டில் அனைத்து ஆலைகளும் இருக்க வேண்டும். டயர் தொழிற்சாலைக்கு உரிய சட்டத்திருத்தங்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் இங்கு தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார்.ஆனால், இந்த விவாதம் பேசுபொருளானது, காரணம், இப்படி ஒரூ தொழிற்சாலையே ராணிப்பேட்டையில் இல்லை என்று பல முக்கிய பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு தொகுதியின் எம்எல்ஏவுக்கு அங்கு இருக்கும் பிரச்னைகள் குறித்தும், ஆலைகள் குறித்தும் உண்மை நிலவரம் தெரிந்திருக்கவில்லையே என்று பலரும் கண்ணீர் விடும் எமோஜிகளுடன் கருத்துகளை பதிவிட்டிருந்ததால் வைரலானது.இது குறித்து அமைச்சர் கீர்த்தனா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ராணிப்பேட்டையில் ஜே.கே. டயர் நிறுவனம் குறித்து சட்டப்பேரவையில் ஒரு குறிப்பு வெளியானது. ஆனால் அது குறித்து சரிபார்த்ததில், ராணிப்பேட்டையில் ஜே.கே. டயர் நிறுவனத்திற்கு உற்பத்தி ஆலை எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், பேரவை உறுப்பினர் எழுப்பிய சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் கண்டறியப்படும்; மேலும் தேவைப்படும் இடங்களில் உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.A reference was made in the Assembly today to a JK Tyre unit in Ranipet. On verification, JK Tyre does not have a manufacturing facility in Ranipet. The environmental issue raised by the Hon’ble Member will, however, be looked into to identify the concerned non JK tyre unit and… pic.twitter.com/9eIi6vaDX3— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) September 3, 2026 இந்த விவாதம் குறித்து அறிந்து, ஜேகே டையர் நிறுவனமும், தங்கள் செயல்பாடுகள் அனைத்தும் சட்டரீதியான சுற்றுச்சூழல் அனுமதிகள் பெற்று, ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்கவே செயல்பட்டு வருகின்றன என்பதை நிர்வாகம் சார்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது.மேலும், தமிழ்நாட்டில் 3,510 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட ரூ.5,143 கோடி மதிப்பிலான முதலீட்டினை மேற்கொள்ளும் வகையில், ஜேகே டையர் நிறுவனம், வழிகாட்டுதல் தமிழ்நாடு அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதையும் இங்கே குறிப்பிடுகிறேன் என்று பதிவிட்டு, அந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் அமைச்சர் கீர்த்தனா.