மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மமிதா பைஜூ! என்ன ஆனது?

Wait 5 sec.

நடிகை மமிதா பைஜூ உடல் நலக்குறைவால் ஓய்வில் இருக்கிறார். நடிகை மமிதா பைஜூ தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். தொட்டதெல்லாம் ஹிட் என்பது போல் மிகக் குறைந்த வயதிலேயே அதிக வெற்றிப்படங்களைக் கொடுத்த நாயகியாகியுள்ளார்.இந்த ஆண்டிலேயே ஜன நாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட் என மமிதா பைஜூ நாயகியாக நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது, பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் டைபாய்டு காய்ச்சல் காரணமாக மமிதா பைஜூ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மமிதா விடியோ ஒன்றை வெளியிட்டு, உடல் வலி மற்றும் அலர்ஜியால் அவதிப்பட்டு வருதாகக் கூறினார். இதனால், செப். 5 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் மமிதா கலந்துகொள்ள இருந்த ஓணம் கொண்டாட்டமும் ரத்து செய்யப்பட்டது.தற்போது, சில நாள்கள் சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து மமிதா வீடு திரும்பிள்ளாராம். ஆனால், மேலும் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் அவர் நடித்துக் கொண்டிருந்த திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.என் முதல் திரைப்படத்தை இயக்கத் தயாராக உள்ளேன்: பார்வதி திருவோத்துActress Mamitha Baiju is resting due to ill health.